அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 ஹலோ... 1100 அம்மா கால் சென்டரா...? இந்த வெள்ள நிவாரணம் எப்போ சார் கொடுப்பீங்க....?
சென்னை: முதல்வன் பட பாணியில் தொடங்கப்பட்ட அம்மா கால் சென்டர் மக்களால் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளது. 1100 எண்ணை எப்போது அழைத்தாலும் பிசி என்றோ அல்லது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்றோ பதிவு செய்யப்பட்ட குரல்தான் ஒலிக்கிறது. ஆரம்பித்த 2 நாளிலேயே அம்மா கால் சென்டரை தொடர்பு கொள்ள முடியாத மக்கள் கடும் எரிச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஆட்சி முடியப்போகும் கடைசி நேரத்தில் மக்களின் குறை கேட்ட அம்மா அழைப்பு மையத்தை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் மக்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவிப்பதற்காக கொண்டுவரப்பட்ட அம்மா அழைப்பு மையத்தின் மீதே குறை கூறி வருகின்றனர். கால் சென்டர் தொடங்கிய 2வது நாளிலேயே தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மக்களின் குறைகளை உடனுக்குடன் களையும் வகையில் தமிழக அரசின் சார்பில் அம்மா அழைப்பு மையம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த அழைப்பு மையத்தை 1100 என்ற எண்ணில் 7 நாட்களும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் மக்களின் குறைகள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரம் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 1100 என்ற எண்ணை தொடர்புகொள்ள முயன்ற போது அந்த தொடர்பு எல்லைக்கு வெளியே வெளியே இருப்பதாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதிவு செய்யப்பட்ட குரலே ஒலித்தது. அனைத்து இணைப்புகளும் பயன்பாட்டில் இருப்பதாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்ட குரலை மட்டுமே கேட்க முடிவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சரிதான் நாமும் தொடர்பு கொள்வோம் என்று 1100க்கு அழைத்தால், நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தற்போது பிஸியாக உள்ளது. சிறிது நேரத்திற்குப் பிறகு தொடர்பு கொள்ளவும் என்று குரல் கேட்கிறது. பல முறை தொடர்பு கொண்டும் அதே குரல்தான் ஒலிக்கிறது. இப்படி மக்களின் குறைகளை களைவதாக கொண்டுவரப்பட்ட அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆரம்பமே அமர்களமா இருக்கே... கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த கால் சென்டரை தொடங்கியிருந்தால் வெள்ளத்திலாவது உதவியிருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-