அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் குறைந்துள்ளது. கடந்த 29 மாதங்களில் மிகவும் அதிக சரிவு என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து ரூபாய் கரன்சிக்கு சமீப காலமாக சரிவு காணப்படுகிறது. அரசும், ரிசர்வ் வங்கியும் என்ன நடவடிக்கை எடுத்தாலும், தொடர்ந்து சரிந்தபடியே உள்ளது. இது இந்திய வர்த்தக பொருளாதார நிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு அமெரிக்க டாலருக்கு 50 ரூபாய் என்று கரன்சி பரிமாற்ற காலமெல்லாம் போய் விட்டது.


இப்போது டாலருக்கு நிகரான ரூபாய் என்பது எழுபது ரூபாயை தொடும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. நேற்று காலை ஒரு டாலருக்கு 69.05 என்ற நிலையில் ரூபாய் கரன்சி இருந்தது. சர்வதேச அளவில் ஏற்படும் பல நாட்டு கரன்சி, வர்த்தக பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப, இந்தியாவில் வங்கிகளும், இறக்குமதியாளர்களும் டாலா்களில் கரன்சி பரிமாற்றத்தை அதிகமாக நடத்த வேண்டியிருக்கிறது.

டாலருக்கான தேவை அதிகரிப்பு, ரூபாயின் மதிப்பு குறைவு இரண்டும் பங்குச்சந்ைதயிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு ரூ.68.08 ஆக இருந்தது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-