அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...புதுடெல்லி,

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அதிகளவில் கோடீஸ்வரர்களை கொண்ட நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டிற்கான ஆசியா பசிபிக் வெல்த் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதில், ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சொத்துக்களை கொண்ட தனிநபர்களை மில்லியனர்களாக வகைப்படுத்தியுள்ளனர். இவர்கள் எச்.என்.டபிள்யூ.ஐ. என்றும் அழைக்கப்படுவதுண்டு.

அதன் அடிப்படையில், 2015-ம் ஆண்டு இறுதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அதிக மில்லியனர்களை கொண்ட நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:-


ஜப்பான் (12,60,000 மில்லியனர்கள்)
சீனா (6,54,000 மில்லியனர்கள்)
ஆஸ்திரேலியா (2,90,000 மில்லியனர்கள்)
இந்தியா (2,36,000 மில்லியனர்கள்)
சிங்கப்பூர் (2,24,000 மில்லியனர்கள்)
ஹாங்காங் (2,15,000 மில்லியனர்கள்)
தென் கொரியா (1,25,000 மில்லியனர்கள்)
தைவான் (98,200 மில்லியனர்கள்)
நியூசிலாந்து (89,000 மில்லியனர்கள்)
இந்தோனேசியா (48,500 மில்லியனர்கள்)
2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 105 சதவீதமாக அதிகரிக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-