அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூரில் வாக்காளர் தினம்-பெண்சிசு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த மினி மாரத்தான் போட்டி நடந்தது.

மினி மாரத்தான் போட்டி

வாக்காளர் தினத்தை ஒட்டி, 2016 சட்டமன்ற தேர்தலில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், பெண்சிசுவின் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரம்பலூரில் மினி மாரத்தான் போட்டி நேற்று காலை நடந்தது.

போட்டியை உதவி கலெக்டர் மதுசூதன்ரெட்டி முன்னிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

2,248 பேர் பங்கேற்றனர்

இந்த தொடர் ஓட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக முகப்பில் இருந்து தொடங்கியது. 21 கி.மீ. தூர மாரத்தான் போட்டி குரும்பலூர் பாளையம் வரை சென்று திரும்புதல், 10 கி.மீட்டர் தூர ஓட்டம் அரணாரை பிரிவு பாதைவரை சென்று திரும்புதல் என 2 பிரிவாக நடத்தப்பட்டது. மொத்தம் 2,248 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

21 கி.மீ. ஆண்கள் பிரிவில் 334 பேரும், பெண்கள் பிரிவில் 24 பேரும் கலந்து கொண்டனர். 10 கி.மீ. ஆண்கள் பிரிவில் 1,563 பேரும், பெண்கள் பிரிவில் 327 பேரும் பங்கேற்றனர்.

21 கி.மீ. தூரம்

21 கி.மீ. ஆண்கள் பிரிவில் சேலம் செவன் ஆர்ட்ஸ் கல்லூரி மாணவர் சசிகுமார் (1மணி 12வினாடி), புதுக்கோட்டையை சேர்ந்த தமிழ்வாணன் (1:13), திருச்சி செல்வம் கல்லூரி மாணவர் நந்தகுமார் (1:14) முதல் 3 இடங்களை பெற்றனர். பெண்கள் பிரிவில் பெரம்பலூர் அரசு விளையாட்டு விடுதியை சேர்ந்த கீர்த்திகா(1:48), வினிஷா (2:09), குகனேஸ்வரி (2:10)ஆகியோர் முதல் 3 இடங்களை பெற்றனர்.

10 கி.மீ. தூரம்

10கி.மீ. ஆண்கள் பிரிவில் புதுக்கோட்டை சுதர்சன் பாலிடெக்னிக் மாணவர் அரங்கமுத்து (33நிமிடம் 20 வினாடி ) திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர் லிசின் (33:30) புதுக்கோட்டையை சேர்ந்த ரஞ்சித்குமார் (34:01) முதல் 3 இடங்களை பெற்றனர். பெண்கள் பிரிவில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஜீவிதா(46:49), அரசு விளையாட்டு விடுதி மாணவி கீதா(48:09), அரும்பாவூரைச்சேர்ந்த கலைவாணி ஆகியோர் முதல் 3 இடங்களை பெற்றனர்.

முதல் பரிசு தலா ரூ.10 ஆயிரம்

இப்போட்டிகளில் முதலாவதாக வந்த ஆண், பெண் இருபாலருக்கும் முதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம் வீதம்¢ 4 பேருக்கும், 2-வது பரிசாக தலா ரூ.5,000 வீதம்¢ 4 பேருக்கும், 3-வது பரிசாக தலா ரூ.2 ஆயிரத்து500-க்கு காசோலைகள் வழங்கப்பட்டன.

வீரர்கள் அவதி

கிராமப்புறங்களில் இருந்து வந்திருந்த வீரர்கள் முந்தைய தினமே கலெக்டர் அலுவலகம் மற்றும் விளையாட்டு மைதானத்தில் திரண்டிருந்தனர். ஓட்டத்தை முழுமையாக ஓடி முடித்தவர்களுக்கு பதக்கங்கள் உடனே வழங்காததாலும், ஓடி முடிக்காத சிலர் பதக்கங்கள் பெற்று சென்றதாலும் கோபம் அடைந்த பெற்றோர்கள் உதவி கலெக்டர் மற்றும் போட்டி நடத்திய குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை அமைதிப்படுத்தினர்.

ஓட்டத்தின்போது வீரர்கள் நீர் அருந்துவதற்காக 2 கி.மீ. தூரத்திற்கு ஒரு குடிநீர் டிரம் கடந்த முறை வைக்கப்பட்டது. ஆனால் இந்த முறை குடிநீர் வைக்கப்படாததால் வீரர்கள் சோர்வு அடைந்தனர்.

பெரம்பலூரில் 2248 பேர் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டத்தில் வெற்றிபெற்று பதக்கம் பெற்ற வி.களத்தூர் வீரர்கள். J.ஜாசிம் த/பெ ஜாகிர்உசேன், A. தாசுக் அஹமது த/பெ ஐனுதீன், ரியாஸ் அறமது த/பெ முஜிபுர் ரஹ்மான்


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-