அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சேலம்: தமிழகத்தில், 200 கோடி ரூபாய் மதிப்பில், 1,000 மற்றும், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பால், வியாபாரிகள் பீதியில் உள்ளனர்.
இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில், பாகிஸ்தான், இந்திய ரூபாய் நோட்டுகளை கோடிக்கணக்கில் அச்சடித்து, மேற்கு வங்கம் வழியாக, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், புழக்கத்தில் விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், வங்கி ஏ.டி.எம்.,களில் கூட, கள்ள நோட்டுகளின் புழக்கம் சர்வ சாதாரணமாக உள்ளது. கள்ள நோட்டுகளின் புழக்கத்தை தடுக்க, சி.பி.சி.ஐ.டி., பிரிவின், 'பேக் நோட் பைரசி' பிரிவு செயல்பட்டபோதிலும், கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.விழிப்புணர்வு 'நோட்டீஸ்' :
Avoid 2AQ and 8AC serial number notes: RBI notification
இந்நிலையில், கனரா வங்கி உட்பட பல்வேறு தேசிய வங்கிகளின் சார்பில், அதன் கிளைகளில், வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், ரிசர்வ் வங்கி தகவலின்படி, இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, 2 ஏ.க்யூ., பி.ஏ.சி., வரிசையிலான, 1,000 ரூபாய் நோட்டுகள், கள்ள நோட்டுகள் என கண்டறியப்பட்டுள்ளதால், அந்த நோட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 500 ரூபாய் நோட்டுகளில், 2 ஏ.க்யூ., பி.ஏ.சி., 100 ரூபாய் நோட்டுகளில், 4 ஏ.க்யூ., ஏ.ஏ.சி., ஆகியன கள்ள நோட்டுகளாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி கூறுகையில், ''கள்ள நோட்டு புழக்கத்தால், பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாவது,மளிகை, சிறு வியாபாரிகளே. கள்ள நோட்டு புழக்கம் குறித்து வங்கிகள் எச்சரிக்கை
விடுத்துள்ள போதிலும், அதை தடுக்க போலீசார் தீவிரம் காட்டினால் மட்டுமே, இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட முடியும்,'' என்றார்.
கும்பலின் 'டெக்னிக்': வங்கி மேலாளர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் கள்ளநோட்டை கட்டுப்படுத்த, போலீசில், சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நான்கு இடங்களில் மட்டுமே, சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இதை நன்கு தெரிந்து கொண்ட கள்ளநோட்டு கும்பல், சேலம், நெல்லை, ஈரோடு உட்பட இதர மாவட்டங்களில், கள்ள நோட்டுகளை அதிக அளவில் புழக்கத்தில் விட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-