அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மணிக்கு 1195 கிலோமிட்டர் வேகத்தில் பறப்பது என்பது ஒலி பயணிக்கும் வேகத்துக்கு இணையானதாக கருதப்படுகிறது. இந்த வேகத்தை ஒரு மேக் (Mach) வேகம் என்று கூறுவதுண்டு.

இந்நிலையில், கனடாவை சேர்ந்த ‘பொம்பார்டியர்’ விமான தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை பொறியாளரான சார்லஸ் என்பவர் ஒலியைவிட பத்து மடங்கு வேகத்தில் சீறிப்பாயும் ‘ஸ்க்ரீம்ர்’ என்ற ஹைப்பர்சோனிக் விமானத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

தற்போது அதைவிட இருமடங்கு அதிக வேகத்திலும், கான்க்ரோட் ரக விமானத்தைவிட 12 மடங்கு அதிக வேகமாகவும் பறக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த ‘ஆன்ட்டிப்போட்’ என்ற விமானத்தை வடிவமைப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பத்துப்பேரை ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்படும் இந்த ஹைப்பர்சோனிக் விமானம் மணிக்கு 20 ஆயிரம் கிலோமீட்டர் வேகம்வரை பறக்கும் என சார்லஸ் கூறுகிறார்.

உதாரணமாக, இங்கிலாந்து தலைநகரான லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம் 5,567 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் தற்போது சுமார் எட்டு மணி நேரமாக உள்ளது. இந்த ‘ஆன்ட்டிப்போட்’ விமானம் தயாராகி விட்டால் வெறும் 11 நிமிடங்களிலேயே லண்டனில் இருந்து நியூயார்க் நகரை சென்றடைந்து விடலாம்.

நான்கு இறக்கைகள் கொண்ட ‘ஆன்ட்டிப்போட்’டின் இறக்கைகளில் ராக்கெட்களை உந்திக்கிளப்பும் ‘பூஸ்ட்டர்கள்’ பொருத்தப்பட்டு இருக்கும். இந்த பூஸ்ட்டர்கள் சில வினாடிகளுக்குள் ஐந்து மேக் வேகத்தில் 40 ஆயிரம் அடி உயரத்துக்கு விமானத்தை உந்திச்செல்ல வைக்கும். பின்னர், பூஸ்ட்டர்கள் மட்டும் தனியாக கழன்று பூமிக்கு திரும்பிவிடும்.

அதன்பின்னர், விமானத்தில் உள்ள சூப்பர்சோனிக் என்ஜின் இயங்க ஆரம்பித்து, உச்சபட்ச வேகமான 24 மேக் வேகத்தை அடையும். அந்த வேகத்தில் என்ஜின் அதிகமாக சூடேறாமல் தடுப்பதற்கு விமானத்தின் மூக்கு மற்றும் இறக்கை பகுதியில் அமைக்கப்படும் சிறிய துவாரங்களின் வழியாக காற்று உறிஞ்சப்பட்டு, விமானத்தின் மையப்பகுதியை குளிரூட்டும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என சார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு சிறப்புவாய்ந்த இந்த ‘ஆன்ட்டிப்போட்’ விமானத்தின் திட்ட வரைப்படத்தை இந்தியாவை சேர்ந்த அபிஷேக் ராய் என்பவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-