அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய்: தங்கள் உற்றார் உறவினர்களை பிரிந்து இளைமையை தியாகம் செய்து பணிக்காக‌ வெளிநாடு சென்று 2 ஆண்டுகள் கழித்து நாடு திரும்பும் ஏழை தொழிலாளர்கள் கொண்டு வரும் LCD டிவி,வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும் என இந்திய அரசை தமீமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். மமக பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி யுஏஇ வருகை தந்தார் ஜனவரி 7 அன்று அபுதாபியில் மர்ஹபா வெல்பேர் அசோசியேசன் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சிக நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று துபாயில் மனித நேய மக்கள் கலாச்சார பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்க கூட்டமும் நடைபெற்றது. பல்வேறு பிரதிநிதிகளும்,இளைஞர்களும்,பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றும் நண்பர்களும்,தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சி நுழைவாயிலுக்கு மறைந்த இடதுசாரி தலைவர் A.P.பரதன் அவர்களின் பெயரும்,அரங்கத்திற்கு சமூக சேவகர் செங்கிஸ்கான் பெயரும் சூட்டப்பட்டு நிகழ்ச்சி பன்முகத்தன்மையோடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுக்கூர். அப்துல்_காதர் தலைமையேற்றார். துபை,ஷார்ஜா,அல் அய்ன், அபுதாபி மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 1 வாரத்தில் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்திக்காட்டிய செயலாளர் யூசுப்ஷா உள்ளிட்ட அனைவருக்கும் தமீமுன் அன்சாரி பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் கட்சி நிலைபாடு,அரசியல், சமூகம் குறித்து மக்கள் கேட்ட கேள்விகளுக்கு தமிமுன்_அன்சாரி விளக்கமளித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, பல்வேறு கட்சி தலைவர்களும் எங்களிடம் பேசி கொண்டு தொடர்பில் இருக்கிறார்கள். அக்டோபர் மாதம் நடைபெற்ற எங்கள் தஞ்சாவூர் பொதுக்குழுவில் பங்கேற்க ஜவாஹிருல்லா அவர்களை அழைத்தேன். அதையே சமாதான பொதுக்குழுவாக அறிவிப்போம் என்றேன் மேலும்திருமாவளவன், சீமான் மற்றும் சமுதாய தலைவர்கள் அனைவரும் சமாதானம் ஏற்படுத்த முயற்சித்தார் ஆனால் அனைத்தையும் ஜவாஹிருல்லா அவர்கள் நிராகரித்து விட்டார். நீதிமன்றத்தில் கட்சி யாருக்கு என்ற வழக்கு நடைபெற்று வருகிறது தீர்ப்புக்கு பிறகு அடுத்த கட்டத்தை பற்றி முடிவு செய்வோம்.

மேலும் ஜவாஹிருல்லா அவர்கள் தன் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவிப்பாரானால் எங்கள் செயற்குழுவை கூட்டி அவர்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து பரிசீலிப்போம். என்றுமே சமாதான கதவுகளை நாங்கள் என்றுமே அடைப்பதில்லை. தற்போது எங்கள் கட்சியில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக சேர்ந்து கொண்டிருக்கின்றனர்.அனைத்து தமிழ் மக்களுக்கும் இதற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த கட்சி பிளவுபட்ட போது 60 சதவீத தொண்டர்கள் எங்களுடன் வந்து விட்டார்கள். எங்கள் மீது அனுதாபம் கொண்டு எங்கள் கட்சிக்கு பொருளாதார ரீதியான உதவிகளை எங்களின் தொண்டர்கள் ,சமூக ஆர்வலர்கள் ,பொது மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து எங்கள் கட்சியை நிதி சிக்கலிமல் நடத்துவதற்கு பல நல்லுள்ளங்கள் உதவி கொண்டிருக்கிறார்கள்.

வெள்ள நிவாரண பணிகளை நாங்கள் வீரியமாக செய்திருந்தோம். ரூ 5 கோடி வரைக்குமான நிவாரண பணிகள் எங்களால் வழங்கப்பட்டன. இந்த பொருட்களை தந்தவர்களில் இந்து சமுதாய மக்கள் ,கிறிஸ்தவ சமுதாய மக்கள், முஸ்லிம்கள் என அனைவரும் உள்ளனர். தேர்தல் தொடர்பாக யாருடன் கூட்டணி யாருடன் என்பது தொடர்பாக முடிவு செய்ய‌ ஜனவரி 23தேதி தலைமை செயற்குழு கூடுகிறது .இதில் தேர்தல் தொடர்பான எங்களின் அரசியல் நிலையை தெரிவிப்போம். மத்திய பாஜக‌ அரசு எல்லா நிலைகளிலும் தோல்வியடைந்து விட்டது.தற்போது ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று வரை இரட்டை வேடம்தான் போடுகிறது.தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல தமிழகத்தில் இவர்களின் நடவடிக்கைகள் மக்களிடம் எடுபடாது.

மேலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நலன் தொடர்பாக மத்திய அரசுக்கு அக்கறை இல்லை.அவர்களுக்கான நல திட்டங்கள் எதுவிமில்லை. மேலும் வெளிநாடுகளின் 2 வருடங்கள் பணியாற்றி விடுமுறையில் நாடு திரும்பும் தொழிலாளர்கள் கொண்டு வரும் LCD TV,வீட்டு உபயோக‌ பொருட்கள் மீது வரைமுறையில்லாமல் சுங்க வரி விதிக்கப்படுகிறது. இதனை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். மேலும் விமான நிலையங்களில் வீட்டு உபயோக பொருட்கள் கொண்டு வரும் தொழிலாளர்களிடம் சுங்க வரி என்ற பெயரில் முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் வருகிறது. இது தொடர்ந்தால் சென்னை விமான நிலைய முற்றுகை போராட்டம் அறிவிக்க எங்கள் கட்சி சார்பில் ஆலோசிக்கப்படும் என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-