அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 Dubai is fourth most visited city in the world துபாய்: 2015ம் ஆண்டில் உலக மக்கள் அதிகம் சுற்றிப் பார்த்த நகரங்களில் 4வது இடத்தில் உள்ளது துபாய். 2015ம் ஆண்டில் உலக மக்கள் அதிகம் பேர் சுற்றிப் பார்த்த நகரங்களில் 4வது இடத்தை பிடித்துள்ளது துபாய். கடந்த ஆண்டு மட்டும் 1 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமானார் துபாயை சுற்றிப் பார்த்துள்ளனர். Dubai is fourth most visited city in the world முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு 1 கோடியே 30 லட்சம் பேர் துபாயை சுற்றிப் பார்த்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து துபாய் சுற்றுலாத் துறையின் டைரக்டர் ஜெனரல் ஹிலால் சயீத் அல்மாரி கூறுகையில், கடந்த ஆண்டு துபாயின் சுற்றுலாத் துறை வலுவடைந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 14.2 மில்லியன் பேர் துபாய்க்கு வந்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் ஓராண்டில் 2 கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அதிக முயற்சி செய்ய வேண்டி உள்ளது என்றார். கடந்த ஆண்டு துபாயை அதிகம் சுற்றிப் பார்த்தவர்களில் அதிகம் பேர் இந்தியர்கள். கடந்த ஆண்டு மட்டும் 16 லட்சம் இந்தியர்கள் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர். பொருளாதாரம் மந்தமாக உள்ள நிலையிலும் இந்தியர்கள் அதிக அளவில் துபாய் சென்றுள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு துபாய்க்கு சென்று வரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு கூடுதலாக 10 லட்சம் பேர் துபாய்க்கு சுற்றுலா வந்துள்ளனர்.
 

1 கருத்துரைகள்:

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-