அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 

ஹாங்காங்,

உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் 3-வது இடத்தில் சீனாவின் 'ஹூவேய்' நிறுவனம் உள்ளது. சாம்சங் 23.8 சதவீதத்துடன் முதலிடத்திலும், ஆப்பிள் 13.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. குறிப்பாக, சீனாவில் கடந்த சில மாதங்களில் 'ஹூவேய்' வேகமாக பிரபலமாகியுள்ளது. 
முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மிகப்பெரும் போட்டியாக சீன போன் தயாரிப்பு நிறுவனங்கள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. முன்னணி பிராண்டு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அனைத்து வசதிகளையும் மிகக்குறைந்த விலையில் இந்த சீன போன்கள் தருவதாலேயே பலர் சீன ஸ்மார்ட்போன்களை விரும்புவதாக 'ஹூவேய்' நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. 


இந்நிலையில், 2015-ம் ஆண்டில் 10.8 கோடி ஸ்மார்ட்போன்களை உலகம் முழுவதும் விற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே ஆண்டில் 10 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்றிருக்கும் முதல் சீன நிறுவனம் 'ஹூவேய்' என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-