அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 

ஸ்ரீநகர், ஜன. 11-

  அப்சல் குருவின் மகன் காலிப் குரு 10-ம் வகுப்பு தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளான்.

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது அப்சல் குருவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். அப்சல் குருவின் மகன் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவண்டிபோரா பகுதியில் வசித்து வருகிறான்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநில தேர்வுகள் ஆணையம் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டது. இதில் காலிப் குரு 500-க்கு 474 மதிப்பெண்கள் எடுத்துள்ளான்.

மொத்தமுள்ள 5 பாடங்களிலும் அவர் ஏ-1 கிரேடில் தேர்ச்சி பெற்றுள்ளான். அப்சல் குருவின் மகன் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல்வேறு தரப்பினரும் காலிப் குருவிற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-