அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
புதுடெல்லி,


சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான மானியம் நேரடியாக நுகர்வோர் வங்கி கணக்குக்கு செலுத்தும் திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மண்ணெண்ணெய் மானியமும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.


இந்த திட்டத்தை சத்தீஷ்கர், மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய 8 மாநிலங்கள் சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் செயல்படுத்த முன்வந்துள்ளன. அந்த பகுதிகளில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் அந்த பகுதிகளில் நுகர்வோர் வெளிமார்க்கெட் விலைக்கு ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்க வேண்டும். அதற்கான மானியம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். ஏற்கனவே சிலிண்டருக்கான மானியம் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-