அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிப். 1 முதல் இலவச சிகிச்சை, அறுவைச் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார் அதன் நிறுவனர் அ. சீனிவாசன்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை அளித்த பேட்டி:

அகில இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழக இணைவு பெற்ற இந்த மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு பிரிவுகள் உள்ளன.

மேலும் சி.டி. ஸ்கேன், சிறுநீரக டயாலிசிஸ், அல்ட்ரா ஸ்கேன், எக்கோ, லேபராஸ்கோபி, எண்டோஸ்கோபி, டிரெட்மில், டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் இ.சி.ஜி, மத்திய மருத்துவப் பரிசோதனைக் கூடம், ரத்த வங்கி, ரத்தக் கூறுகள் பகுப்பாய்வு பிரிவு ஆகிய வசதிகளுடன் 24 மணி நேரமும், சிறந்த மருத்துவச் சிகிச்சை, அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவும் இயங்கி வருகிறது. மேலும், மகளிருக்கான மார்பக கட்டி மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கான சிறப்பு வசதி தொடங்கப்பட்டுள்ளது.

35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையுடன் கூடிய சிறப்பு முழு உடல் பரிசோதனை வசதிகளும் உள்ளன. முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டமும், ஸ்டார் ஹெல்த் காப்பீட்டுத் திட்ட வசதியும், தமிழக அரசு அலுவலர் மற்றும் அரசு ஒய்வூதியர்களூக்கான காப்பீட்டுத் திட்ட வசதிகளும் உள்ளன.

தனலட்சுமி சீனிவாசன் தாய் சேய் நலத் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்காக, அவர்கள் கருவுற்ற காலத்தில் இருந்து பிரசவம் வரை அனைத்துப் பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் இலவசமாக செய்யப்படுகிறது. மேலும், பிரசவம் முடிந்த உடன் ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம், கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையின் 8 ஆம் ஆண்டுத் தொடக்க விழாவை முன்னிட்டு, பிப். 1 முதல் 29 ஆம் தேதி வரை அனைத்து வகை மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்பட உள்ளன.

இந்த வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

மருவத்துமனை டீன் ஜெ. ரெங்கநாதன், கண்காணிப்பாளர் திருநீலகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-