அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஜம்மு காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகம்மது சயித் காலமானதைத் தொடர்ந்து அடுத்த முதல்வராக அவரது மகள் மெஹபூபா முஃப்தி பதவியேற்க உள்ளார். இதன் மூலம், காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையையும் அவர் பெற உள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அடுத்த முதல்வராக மெஹ்பூபா முஃப்தி பொறுப்பேற்கவுள்ளார் என்று மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான முஸாஃபர் ஹுசைன் பெய்க் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரை ஆளும் மக்கள் ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவும் மெஹபூபா, முதல்வராக பதவியேற்க ஒப்புதல் அளிக்க வேண்டியது அவசியம். எனினும், பாஜக சார்பில் எந்த எதிர்ப்பும் கிளம்பாது என்றே கருதப்படுகிறது.

மக்கள் ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவே இறுதியாக அமையும் என்று கூறப்படுகிறது.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-