அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிகப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்களை தமிழகம் முழுவதுமிருந்து நல்லெண்ணம் படைத்த மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வருகிறார்கள். வெளிநாட்டிலிருந்தாலும் தமிழகத்தில் வெள்ளபாதிப்பை அறிந்து துபாய் வாழ் தமிழர்கள் வெள்ள நிவாரண பொருட்களை சேகரித்து தமிழகத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

அமீரகத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்த வர்த்தகர்கள் , தொழிலாளர்கள் , பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான பொருட்களை சேகரித்து கார்கோ மூலம் அனுப்பி வருகின்றனர்.

அமீரகத்தில் உள்ள தமிழர்கள் போர்வைகள் ,குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான அத்தியாவசிய பொருட்கள், பிஸ்கட்கள், பால் பவுடர் என‌ டன் கணக்கில் வெள்ள நிவாரண பொருட்களை தமிழகத்திற்கு அனுப்பி வைத்த வண்ணம் உள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-