அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

அஸ்ஸலாமு அழைக்கும்

துபாய் ஜாபில் பார்க்கில் டிசம்பர் 2 அன்று ஈமான் சங்க சார்பாக அமீரக 44 வது தேசிய தினம் கொண்டாட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.

துபாய்: துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் அமீரகத்தின் 44 ஆவது தேசிய தினம் வெகு உற்சாகமாக 02.12.2015 புதன் கிழமை காலை முதல் மாலை வரை ஸாபில் பூங்காவில் கொண்டாடப்பட்டது. வருடந்தோறும் ஈமான் அமைப்பு அமீரகத்தில் வசித்து வரும் தமிழ் குடும்பத்தினரை ஒருங்கிணைத்து சந்திப்பு நிகழ்விற்கு ஏற்பாடுகளைச் செய்வதுடன் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளையும் வழங்கி வருகிறது.

ஈமான் கல்சுரல் செண்டரின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம் ஹபிபுல்லா தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். துணைப் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ.முஹம்மது தாஹா துவக்கவுரை நிகழ்த்தினார்.. சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.இதில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ,மாணவியர்கள்  மற்றும் பெரியவர்கள் பங்கேற்று பரிசுகளை வென்றனர்.குலுக்கலில் முதல் பரிசாக 40 இன்ச் டிவி பரிசளிக்கப்பட்டது.

விழாக்குழு செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின் பரிசு வழங்கும் நிகழ்வை தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள் அரேபியா ஹொல்டிங்ஸ் பொது மேலாளர் அப்துல் ரவூஃப், கீழக்கரை ரஃபி அஹமது, இஸ்லாமிக் வங்கி ஜாபர், அப்துல் பாசித் ஆலிம்,பிரசன்னா உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பலர் பங்கேற்று சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் கீழை ஹமீது யாசின், கும்பகோணம் சாதிக், முஹைதீன், காதர், உஸ்மான், யாக்கூப், ஈஸா, ஹிதாயத் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ரபீக்,அம்ஜத், எஸ்கேவி ,சித்தீக்,படேஷா பசீர், இல்யாஸ் உள்ளிட்ட பலர்  செய்திருந்தனர். சிறுவர் சிறுமியர்கான விளையாட்டு போட்டிகள் நடத்த உதவிய கவிதா பிரசன்னா உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.


இதில் 30 மேற்பட்ட வி.களத்தூர் மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த முறை சற்று வி.களத்தூர் மக்கள் குறைவாகவே கலந்து கொண்டனர்.

கடந்த முறை 60பேர் கலந்து கொண்டனர்,

இந்த முறை அதிர்ஷ்ட குலுக்கலில் நமது ஊரை சேர்ந்த யாவருக்கும் பரிசு விழ வில்லை.

விளையாட்டுப் போட்டியில் மட்டும் ராசல் கைமா மூஜீப் மகன் முதல் பரிசு வென்றார்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-