அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள து. களத்தூர் ஊராட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது உத்தரவிட்டார் .

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட து. களத்தூர் ஊராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்புக்கு சுமார் வரை இருமடங்கு வரி வசூல், தொகுப்பு வீட்டுக்கு லஞ்சம், குடிநீர் தொட்டி அமைப்பதில் மோசடியில் ஈடுபட்டதாக து.களத்தூர் ஊராட்சித் தலைவர் சவுந்தரி கிருஷ்ணமூர்த்தி மீது புகார் எழுந்தது. மேலும், இதுகுறித்து, அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் மாவட்ட ஆட்சியர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

இந்த புகார் மீது விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, ஊராட்சித் தலைவர் சவுந்தரி கிருஷ்ணமூர்த்தியை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-