அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சவுதி:
சவுதி Jazan General Hospital இன்று காலையில் பயங்கர தீ விபத்தில் 28 பேர் பலி:107 படுகாயம் :
டிசம்பர் 24:2015
       சவுதியில உள்ள Jazan General Hospital  போது மருத்துவமனையில் இன்று காலை 4 மணி அளவில் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
   இந்த  விபத்து Ac இணைப்பில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
     இதில் தீ முதலில்  அவசர பிரிவிலும் பின்னர் இந்த தீ மகப்பேறு தளத்திற்கு
பரவியது. இதில் 28 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
  இந்த மருத்துவ மனையில் இந்திய செவிலியர்கள் அதிகமாக வேலை செய்து வருகின்றனர். இவர்களில் யாராவது இந்த விபத்தில் சிக்கியுள்ளார்களா  பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை.
   உடல்கள் கருகி விட்டதால் உடனடியாக அடையாளம் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீயை அணைக்கும் முயற்சி நடைபெற்றது வருகிறது. மின் இணைப்பு இல்லாததால் இதில் சிக்கியுள்ள நபர்களை மீட்டும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-