அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
புதுடெல்லி: ஏர் இந்தியா உள்ளூர் விமானங்களில் 60 முதல் 90 நிமிடங்கள் வரையிலான பயணத்தில் இனி சைவ உணவுகள் மட்டுமே பயண நேரங்களில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நீண்ட நேர பயணத்தில் அசைவ உணவு வழக்கம்போல் வழங்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.இது குறித்து ஏர் இந்தியாவின் பொது மேலாளர் கேப்டன் டி எஸ் பைஸ் கூறுகையில், "ஏர் இந்தியா உள்நாட்டு விமானத்தில் இனி சைவ உணவு மட்டுமே வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமானங்களில் 60 முதல் 90 நிமிடங்கள் வரை செல்லும் உள்ளூர் விமானங்களில் எக்கனாமிக் வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு இனி சைவ உணவு மட்டுமே பரிமாறப்படவேண்டும்.

ஒவ்வொரு பயணிக்கும் அவர்களுக்கு விருப்பமான சைவ அல்லது அசைவ உணவை கேட்டு அதனை விமானப் பணியாளர்கள் கொண்டு சென்று கொடுப்பதற்கு 30 முதல் 40 நிமிடங்கள் ஆகிவிடுகிறது. 60 முதல் 90 நிமிடங்கள் வரையிலான பயணத்தில் இது நேர நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

சைவ உணவுக்காரர்களால் அசைவ உணவு எடுத்துக்கொள்ள முடியாது. அதே சமயம் அசைவ உணவுக்காரர்கள் சைவ உணவை எடுத்துக்கொள்ள முடியும் என்ற 'லாஜிக்'கின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை வரும் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்படும். மேலும் மதிய உணவு மற்றும் இரவு நேர உணவின் போது பயணிகளுக்கு காபி,டீ, வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை கடந்த 23-ம் தேதி அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

'நீண்ட நேர பயணத்தில் அசைவ உணவு உண்டு'

இதனிடையே ஏர் இந்தியா நிறுவனத்தின் மேற்கூறிய அறிவிப்பு சைவம் - அசைவம் பிரச்னையை கிளப்பி விட்டுவிட்டதாக குரல்கள் எழத்தொடங்க, நீண்ட நேரம் பயணிக்கும், அதாவது 90 நிமிடங்களுக்கும் கூடுதலான நேரம் கொண்ட பயணத்தின்போது சைவம், அசைவம் ஆகிய இருவகை உணவு வகைகளுமே வழங்கப்படும் என்றும், முந்தைய முறையில் மாற்றம் ஏதுமில்லை என்றும் சிவில் விமானப்போக்குவரத்து துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-