அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் பிரபல டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்தவர் தேவராஜன். ஜித்தாவிலிருந்து லோடு ஏற்றி ரியாத்திற்கு ஓட்டிக்கொண்டு வந்துள்ளார். வந்த களைப்பின் காரணமாக லாரியை ஓரமாக ஒதுக்கி வைத்து தூங்கியுள்ளார்.

இதை கண்ட சோமாலியாவை சேர்ந்த சில திருடர்கள் அவரை தாக்கி கீழே தள்ளி விட்டு சென்று விட்டனர். படுகாயமடைந்த தேவராஜனை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து ரியாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தேவராஜன் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளருக்கு தகவல் கிடைத்ததும் அவர் விரைந்து வந்து காவல்துறையின் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலவரத்தை கூறியுள்ளார். பின்னர் இரவு பகல் பாராமல் தேவராஜனுடன் அருகில் இருந்து கூடப்பிறந்த சகோதரனைப்போல் சகோதர வாஞ்சையுடன் ஒவ்வொரு உதவிகளையும் செய்து வருகிறார்.

அவர் செய்யும் அந்த உதவிகளை அவருக்கே தெரியாமல் அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியில் விட்டுள்ளனர்.
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-