அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சென்னை(05 டிச.2015): சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் குழந்தை ஒன்றை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞரின் பெயரை அந்த குழந்தைக்கு சூட்டி மகிழ்ந்துள்ளனர் இந்து தம்பதியினர்.


சென்னை கிரசெண்ட் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் இளைஞர் யூனுஸ், இவர் சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவர்களை மீட்டுக் கொண்டு இருந்தார்.

இந்நிலையில் ஊரப்பாக்கம் பகுதியில் மோகன் மற்றும் அவருடய நிறைமாத கர்ப்பிணி மனைவியான சித்ரா ஆகியோர் வெள்ளத்தில் சிக்கியிருந்தனர். இவர்களை இளைஞர் யூனுஸ் காப்பாற்றி பத்திரமாக‌ பாதுகாப்பான இடத்தில் சேர்த்தார். அப்போது பிரசவ வலி ஏற்ப்பட்டு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் தன் குடும்பத்தை சரியான நேரத்தில் தன் நிலையை பொருட்படுத்தாமல் மீட்ட யூனுசுக்கு நன்றி சொல்லும் விதமாக குடும்பத்தினர் அக்குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-