அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
பள்ளிக்கு சென்ற தனது மகனை காணவில்லை அவரை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெண் ஒருவர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்தார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள அசூர் கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து மகன் ஆனந்தராஜ் (17). இவர், பெரம்பலுôர் அரசு மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி “சூப்பர் 30’ சிறப்பு வகுப்பில் படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி அவர் பள்ளிக்கு வரவில்லை எனக் கூறப்பட்டதை யடுத்து, மாணவனின் தாய் செல்வாம்பாள், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ராவிடம் திங்கள்கிழமை புகார் அளித்தார். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணியிடம், ஆனந்தராஜை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டுமென செல்வாம்பாள் புகார் மனு அளித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-