அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் டேட்டா பயன்பாடு அனைவருக்கும் பெரிய தலைவலியாகவே இருக்கின்றது எனலாம். இன்றைய ஸ்மார்ட்போன்களில் இண்டர்நெட் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. இந்நிலையில் அதிக இண்டர்நெட் பயன்பாடு கட்டணத்தை பல மடங்கு அதிகமாகவே செலுத்த வழி செய்யும். இந்நிலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் டேட்டா பயன்பாட்டினை எவ்வாறு குறைக்கலாம் என்பதை பார்ப்போம்.

ஆட்டோ சின்க்: மொபைல் போன்களில் டேட்டாவை சிக்கனம் செய்ய ஒரே முதலில் ஆட்டோ சின்க் ஆப்ஷனினை டிசேபிள் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் எனேபிள் செய்யப்பட்டிருந்தால் மொபைலில் பயன்பாட்டில் இருக்கும் செயலிகள் நோட்டிபிகேஷன் அனுப்ப டேட்டாவை பயன்பன்படுத்தும். இதை டிசேபிள் செய்ய செட்டிங்ஸ் பகுதியில் இருக்கும் அக்கவுன்ட்ஸ் ஆப்ஷனில் ஆட்டோ சின்க் என்ற ஆப்ஷனை அன்டிக் செய்தால் போதும்.

டேட்டா லிமிட்:ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் குறிப்பிட்ட அளவு இண்டர்நெட் மட்டும் பயன்படுத்த வழி செய்யும் டேட்டா லிமிட் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி அதிக டேட்டா செலவாவதை குறைக்க முடியும். டேட்டா லிமிட் செட் செய்ய போனின் டிவைஸ் செட்டிங்ஸ் பகுதியில் இருக்கும் டேட்டா யூசேஜ் ஆப்ஷனை க்ளிக் செய்து தேவையான அளவு செட் செய்து கொள்ளலாம்.

வை-பை:மொபைல் போனில் செயலிகளை அப்டேட் செய்ய வை-பை பயன்படுத்தலாம். இந்த ஆப்ஷனை செட் செய்ய போனில் கூகுள் ப்ளே ஸ்டோர் செட்டிங்ஸ் பகுியில் இருக்கும் Auto-update apps அல்லது Auto-update apps over Wi-Fi ஆப்ஷனை க்ளிக் செய்யலாம்.

க்ரோம் டேட்டா சேவர்: க்ரோம் செய்லியில் டேட்டாவை குறைக்கும் தனி அம்சம் தான் க்ரோம் டேட்டா சேவர். இந்த ஆப்ஷனினை எனேபிள் செய்தால் அதிகப்படியான டேட்டாவை சேமிக்க முடியும்.

ஆஃப்லைன் மேப்ஸ்:கூகுள் மேப்ஸ் செயலியை ஆஃப்லைன் மோடில் வைத்து பயன்படுத்தலாம். இதை எனேபிள் செய்ய தேவையான இடத்தை தேர்வு செய்து மெனு ஆப்ஷனில் “save offline map” க்ளிக் செய்தால் போதுமானது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-