அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய்: அமீரகத்தில் எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரம் என்ற‌ சமூக நல அமைப்பு சார்பாக துபாயில் உள்ள தனியார் வளாகத்தில் வேலை வாய்ப்பு வழிகாட்டி முகாம் Face the Interview, Win the career ' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமை இமாம் சாதிக் இறை வசனம் ஓதி துவங்கி வைத்தார். EIFF-ன் நிர்வாகி முகம்மது முனவ்வர் EIFF அமைப்பு வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனில் எடுத்து வரும் பல்வேறு உதவிகளை எடுத்துரைத்தார். அவர் தனது உரையில், 'EIFF - கல்வி, மருத்துவம், பொருளாதாரம், இறந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தல், தொழிலாளர்களுக்கான சட்ட உதவிகள் மற்றும் அமீரகத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கான பல்வகை வழிகாட்டு முகாம்கள் உட்பட பலதரப்பட்ட பணிகளை விளக்கி கூறினார்.

இதனை தொடர்ந்து பொறியாளர் தமீம் மன்சூர் அவர்கள் பயிற்சி முகாமை தொடங்கினார். அப்போது அவர் இந்த கருத்தரங்கின் நோக்கம் வேலை தேடும் இளைஞர்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதே என குறிப்பிட்டார். மேலும், நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது சம்பந்தமான பல்வேறு முக்கிய குறிப்புகளையும் வழங்கினார். குறிப்பாக, நடை, உடை, பாவனைகளில் ஏற்படுத்தி கொள்ள வேண்டிய மாற்றங்கள், முன் கூட்டிய திட்டமிடல், நேர்முகத் தேர்வை எடுப்பவர்களிடம் நடந்து கொள்ளக் கூடிய அணுகுமுறைகள் மற்றும் நேர்முகத் தேர்வு முடிந்ததும் அதை நாம் எவ்வாறு மீளாய்வு செய்வது? என்பது உட்பட பல உபயோகமான தகவல்களையும் வழங்கினார். இறுதியாக அப்துல் அஜீஸ் நன்றியுரை ஆற்றினார். துபாயின் பல்வேறு பகுதியிலிருந்து வேலை தேடும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.Tamils attended the placement guide camp in Dubai

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-