அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சௌதியில் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு புதிய உரிமைகள்

சௌதி அரேபியாவில், விவாகரத்து பெற்ற பெண்களும் விதவைகளும், உறவுக்கார ஆணின் அங்கீகாரம் பெறாமல் தமது விவகாரங்களில் தாமே முடிவெடுக்க அனுமதியளிப்பது பற்றி, சௌதி அரேபியா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

சௌதி அரேபியாவில், விவாகரத்து பெற்ற பெண்களும் கைம்பெண்களும், உறவுக்கார ஆண் ஒருவரின் அங்கீகாரம் பெறாமல் தமது விவகாரங்களில் தாமே முடிவெடுக்க அனுமதியளிப்பது பற்றி, சவுதி அரேபியா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

தனித்து வாழும் இத்தகைய பெண்களுக்கு, முதற் தடவையாக இதற்கான அடையாள அட்டை வழங்க உள்துறை அமைச்சு ஆலோசித்து வருவதாகவும், சௌதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளை பதிவு செய்வது, மருத்துவ சிகிச்சைகளுக்கான ஒப்புதல் அளிப்பது போன்ற விடயங்களை அவர்கள் சுயமாக செய்வதற்கு இயலும்.

ஆழமான பழமைவாத இஸ்லாமிய சமுகத்தில், குடும்பத்தின் பெண்கள் மீது குடும்பத்து ஆண்கள் வைத்திருக்க கூடிய சட்டப்பூர்வ பிடியை, இந்த புதிய முன்னெடுப்பு தளர்த்தி விடும் என்று, ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-