அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 


துபாய்: அமீரகத்தில் (யுஏஇ) கார்டன் சிட்டி என்றழைக்கப்படும் பசுமை நகரம் அல் அய்ன் ஆகும். துபாயிலிருந்து சுமார் 125 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரை சுற்றிலும் மரங்களும் செடிகளும் அதிகம் காணப்படும். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு இடங்கள் உள்ளன. விவசாயம் அதிகம் நடைபெறுகிறது. குளிரூட்டப்பட்ட இண்டோர் விவசாய முறையும் இங்கு உள்ளது. பல வகையான‌ காய்கறிகளும் இங்கு விளைவிக்க படுகின்றன. கோழி பண்ணை, பால் பண்ணைகள் இங்கு உள்ளது.

இதில் குறிப்பிடதக்க வகையில் விளங்குவது ஜெபல் ஹபீட் (jebel hfeet) என்ற மலை பகுதியாகும். இதன் உயரம் சுமார் 4098 அடியாகும் மலையில் 11.7 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான மூன்று வழி சாலையுடன் 60 வளைவுகளுடன் திகழ்கிறது. உலகின் தலை சிறந்த மலை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும். 1000த்திற்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு மலைபகுதியில் ஏற்பாடு செய்துள்ளார்கள். மலையின் உச்சியில் நட்சத்திர ஹோட்டல் அமக்கப்பட்டுள்ளது. இந்த மலையின் உச்சியில் நின்றுக் கொண்டு பசுமையாக காட்சியளிக்கும் அல் அய்ன் நகரத்தையும் ஓமான் நாட்டு எல்லைகளையும் காணலாம்.

மலையடிவாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது ‘GREEN MUBAZZARAH’ எனும் புல்வெளி பூங்கா. இந்த பூங்கா இரவில் ரசிப்பதற்கேற்ற வகையில்,வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு பரந்த வெளியிலும் பாறைகள் மேலும் புற்களை நட்டு வளர்த்துள்ளனர். இப்பகுதிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் பல்வேறு இயற்கை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களும் உள்ளது. உலகம் முழுவதுமிருந்து இயற்கை ஆர்வலர்கள் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-