அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
அல்லாஹ் வழங்கிய அருட்கொடை
அகிலத்தின் அனைத்து வினாக்கட்கும் முஹம்மத்(ஸல்)
அவர்களின் வாழ்வுதான் ஒருவிடைஅள்ளக் குறையாப் பாத்திரம்
அறியாமை நிறைந்திருந்த அற்றைப் பொழுதினில்
அறிவை வளர்த்த சூட்சமம்


பணிவு என்பதன் பொருளாக
பண்பகராதியில் முஹம்மத்(ஸல்) என்றே உணரப்படும்
படைத்தோன் தந்த அருளாக


அத்தனை துறையிலும் வென்றார்

அதனாற்றான் உலகத்தில் உயர்ந்தவர்கள் பட்டியலில்
முதன்மை இடத்தில் நின்றார்


அண்ணலின் சீரிய தலைமை
அரபகத்தில் வியாபித்த கொடுமைகளை முற்றிலுமாகத்
துடைத்துப் போட்ட நிலைமை

அண்ணலின் பொன்மொழி கற்போம்
அயராமல் நேர் வழியைப் பின்பற்றி ஈருலகில்
வெல்ல உறுதியாய் நிற்போம்!
நன்றி -அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-