அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அமெரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த பியூர்டோ ரிகோ அழகி டெஸ்டினி போட்டிகளில் கலந்துகொள்வதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம்களை அமெரிக்காவுக்குள் விடாமல் தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்ததையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரபல ஆவணப்பட இயக்குனர் நியூயோர்க் நகரில் உள்ள டிரம்ப் டவர் முன்பு தனது கையில் 'நாங்கள் எல்லாம் முஸ்லீம்' என்ற வாசகம் அடங்கிய கார்டுடன் நின்றார்.

இதை பார்த்த பியூர்டோ ரிகோ அழகி டெஸ்டினி வெலஸ்(20) தனது  ட்விட்டரில், முஸ்லீம்கள் தம் அமைப்புகளை பயன்படுத்தி அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடத்துகிறார்கள். நமக்கு எண்ணெய்யை அளித்துவிட்டு இந்த நாட்டை தீவிரவாதமயாக்கியது தான் முஸ்லீம்கள் செய்தது.

மேலும், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் புனித நூல்களில் தீவிரவாதம் பற்றி எதுவும் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இவரது கருத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததையடுத்து. அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. பின்னர் வெலஸ் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.  ஆனால், வெலஸை அழகிப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் மிஸ் பியூர்டோ ரிகோ அமைப்பு காலவரையின்றி இடைக்கால தடை விதித்துள்ளது.
Jaffna Muslim .

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-