அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...20012_n
பல்வேறு கால கட்டத்தில் இயக்கங்கள் இடையே முரண்பாடுகள் இருந்த வேளையில் ஒற்றுமையை முன் நிறுத்தி இதற்கு மேலும் ஒன்று படா விட்டால் சமுதாய நிலைமை மோசம் அடையும் என்ற வகையில் அணைத்து அமைப்புகளும் கட்சிகளும் இணைந்து கூட்டமைப்பை உருவாக்கின அது மாவட்ட தோறும் பரவின இதன் விளைவு அரசாங்கம் அடி பணிந்தது காவல்துறை சற்று விலகியது விஸ்வரூபம் விசயத்தில் அல்லாஹ்வின் கருணையால் இஸ்லாமிய இயக்கங்கள் தமிழ் நாட்டில் எடுக்காத விஸ்வரூபத்தை மக்கள் பார்த்தனர் அதன் பிறகு ஒவ்வொரு நகருவும் நகர்ந்து கொண்டு இருக்கும் போது பல்வேறு முரண் பட்டால் சமுதாயம் இயக்கங்கள் தொய்வு அடைகிறதோ ?? என்ற எண்ணம் எல்லோர் இடத்திலும் உதித்த போது அப்போதும் அல்லாஹ்வின் கருணை வெள்ளம் என்ற பெயரால் அணைத்து இயக்கங்களும் நாங்கள் தமிழ் நாட்டில் நாங்கள் சோர்வு அடைபவர்கள் இல்லை நாங்கள் உச்சத்தை தொட்டவர்கள் என தீவிரமாய் களம் கண்டு இஸ்லாமியர்கள் என்றால் என்ன அமைப்புகள் என்றால் என்ன என்று காட்டியது !!


அது நடந்து கொண்டு இருக்கும் போதே மீண்டும் சமுதாயதிற்கு சோதனை காஜா மைதின் கொலை என்ன செய்ய போகின்ற இயக்கங்கள் கட்சிகள் என அனைவரும் கண் கொத்தி பாம்பாக பார்த்து கொண்டு இருக்கும் போது இறந்தவர் எந்த அமைப்பை வேண்டுமானாலும் சார்ந்து இருக்கட்டும் முதலில் முஸ்லிம் என்ற நோக்கத்தோடு (உண்மையில் சொல்லுகிறேன் அமைப்பில் இருபதற்கு இயக்க தொண்டானாக இருபதற்கு பெருமை படுகிறேன் )களம் காண நேற்று ஏர்வாடியில் இந்திய தவ்ஹித் ஜமாத் ,தமிழ் நாடு முஸ்லிம் முனேற்ற கழகம் ,பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ,தேசிய லீக் ,முஸ்லிம் லீக் ,மனித நேய மக்கள் முனேற்ற கழகம் ,மதமுமுக ,இன்னும் பல அமைப்புகள் என ஒன்றாக கூடி கொடுத்த எதிர்ப்பு ஒட்டு மொத்த காவல்துறை கவனத்தையும் ஈர்த்து உள்ளது இதற்க்கு அடுத்தார் போல் அமைப்புகளின் தலைவர்கள் இந்திய தவ்ஹித் ஜமாத் தலைவர் எஸ் எம் பாக்கர் ,தமுமுக தலைவர் ஜே எஸ் ரிபாய் ,தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் பொது செயலாளர் யூசுப் ,பி எப் ஐ தலைவர் இஸ்மாயில் ,தேசிய லீக் தலைவர் பசீர் அஹமது .இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹீம் ,முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தின் ,மனித நேய மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பாளை ரபிக் .என் பலரும் கண்டன அறிக்கைகளை கொடுத்தன் விளைவு காவல்துறை செயலில் இரங்கி உள்ளது அடுத்த கட்டமாக அணைத்து இயக்கங்கள் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளனர் ஒரு காலத்தில் அடித்தால் நாதி இல்லாத சமுதாயமாக இருந்த நிலையில் அல்லாஹ் கண்ணியத்தை ஒற்றுமை மூலம் கொடுத்தால் அது சிதைவு அடைந்து விடுமோ ??இயக்கங்கள் பிரிந்து விடுமோ ?? என்ற நேரத்தில் மீண்டும் காஜா மைதினால் அல்லாஹ் சேர்த்து உள்ளான் இதே நிலை நீடிக்க அல்லாஹ் கிருபை செய்வானாக அணைத்து இயக்கங்களையும் அல்லாஹ் ஒன்று சேர்ப்பனாக !!

சமுதாய தொண்டன்
A.யாசர் அரபாத்
திருப்பூர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-