அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...புதுடெல்லி,


இந்தியாவில் இஸ்லாமியர்களைவிட பசுக்களுக்குதான் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறி உள்ளார்.


பாராளுமன்றத்தில் சகிப்புத்தன்மை விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசுகையில், இந்தியாவில் இஸ்லாமியர்களைவிட பசுக்களுக்குதான் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.


இந்தியா பன்முகத்தன்மையிலான மரியாதையின் அடிப்படையில் கட்டி அமைக்கப்பட்டது. இந்தியாவிற்கு ஆப்பிரிக்க அதிகாரிகள் வந்திருந்தபோது, புதுடெல்லியில் உள்ள கேரளா பவனில் சோதனை நடத்தப்பட்டது, அவர்கள் நம்நாட்டில் உள்ள சகிப்புத்தன்மையின்மை தொடர்பாக என்ன நினைப்பார்கள். இந்தியா இஸ்லாமியர்களைவிட பசுக்களுக்கு பாதுகாப்பானதாக உருவாகிஉள்ளது. இந்தியாவில் வெறுப்புடன் உள்ளநிலையில், வெளிநாட்டுடன் ’மேக் இன் இந்தியா’ மூலம் கைகோர்க்க முடியாது. என்று கூறிஉள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-