அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலுார் வட்டாச்சியர் அலுவலகத்தில் தம்பதிகளை அலுவலகத்துக்குள் வைத்து பெண் தாசில்தார் பூட்டி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை சேர்ந்தவர் சாதி்க்அலி, இவருக்கும் பெரம்பலுார் மாவட்டம் துறைமங்கலத்தை சேர்ந்த ரஷியாபானு என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

இவர் இன்று மதியம் பெரம்பலுார் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு தனது மனைவியுடன் சென்றார்.

அப்போது பணியிலிருந்த வட்ட வழங்கல் அலுவலர் கவிதாவை நேரில் சந்தித்து புது ரேஷன் கார்டு பெறுவது குறித்து விளக்கமளிக்குமாறு கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் வட்ட வழங்கல் அலுவலர் கவிதா மரியாதைக்குறைவாக ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதை புதுமண தம்பதிகள் தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வட்ட வழங்கல் அலுவலர் கவிதா, சாதிக்அலி கையில் வைத்திருந்த குடும்ப அட்டைய பறித்துக் வைத்துக் கொண்டு நீ குடும்ப அட்டையை வாங்கறத பார்க்கிறேன் எனக்கூறியதுடன் சாதி்க்அலி மற்றும் அவரது மனைவி ரஷியாபானு ஆகிய இருவரையும் அலுவலகத்துக்குள் வைத்து பூட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிகள் கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்டு அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர்.

தகவலறிந்த பெரம்பலுார் போலீஸார் தம்பதிகளை மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். தம்பதிகளை அலுவலகத்துக்குள் வைத்து பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வட்ட வழங்க அலுவலர் கவிதாவிடம் அவரது தரப்பை கேட்க அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-