அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஆலந்தூர்

மீனம்பாக்கத்தில் பணிச்சுமை காரணமாக விமான பணிப்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.விமான பணிப்பெண்

சென்னை மீனம்பாக்கம் ஏர்–இந்தியா குடியிருப்பில் வசிப்பவர் அனுப்நாயர் (வயது 32). ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் கேபின் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தன்பீரிட்பால்(30). இவர் ஏர்–இந்தியா விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஹஸ்னி(2) என்ற மகள் உள்ளார்.

தன்பீரிட்பாலின் சொந்த ஊர் பஞ்சாப் ஆகும். கடந்த 2007–ம் ஆண்டு விமான பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார் இவரது பெற்றோர் நங்கநல்லூரில் வசிக்கின்றனர். விமானத்தில் பணியாற்றியபோது அனுப்நாயரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தூக்குப் போட்டு தற்கொலை

நேற்று முன்தினம் இரவு அனுப்நாயர் வீட்டிற்கு வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தன்பீரிட்பால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மீனம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தந்தார்.

மீனம்பாக்கம் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் வெங்கட்குமார், செங்குட்டுவன், சப்–இன்ஸ்பெக்டர் ஜான்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தன்பீரிட்பால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பணிச்சுமை

குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், பணிச்சுமையால் வேதனை அடைந்த தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தன்பீரிட்பாலின் பெற்றோர் போலீசாரிடம் கூறினர். நேற்றுமுன்தினம் தன்பீரிட்பால் மஸ்கட்டிற்கு செல்ல வேண்டியவர். அதற்குள் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

தென்னக ஏர்–இந்தியாவில் பணிப்பெண்கள் மற்றும் ஆண் பணியாளர்கள் என 600 பேர் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 300 முதல் 350 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் இவர்களுக்கு அதிக வேலைப்பளு ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜூனியர் பணிப்பெண்களுக்கு அதிக வேலைப்பளு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டிற்கு சென்று வந்தால் குறைந்தபட்சம் 24 மணி நேரமாவது ஓய்வு தர வேண்டும். ஆனால் ஜூனியர் ஊழியர்களுக்கு ஓய்வு நேரம் குறைவாக இருப்பதாகவும் இதனால் தன்பீரிட்பால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.ஆர்.டி.ஓ. விசாரணை

திருமணமாகி 3 ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது பற்றி ஏர்–இந்தியா அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பணிப்பெண் தற்கொலை செய்து கொண்டது உண்மை தான். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது பெற்றோர் கூறுவது பற்றி நாங்கள் எதுவும் சொல்ல விரும்பவில்லை. போலீசார் விசாரணைக்கு பின்னர் தான் உண்மை தெரியவரும்’ என்று தெரிவித்தனர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-