அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

எடுக்கும்
பெண்கள் தங்களின் அத்தியாவசிய தேவை பயன்பாட்டிற்காக STUDIO க்களில் புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.

எடுக்கபட்ட புகைப்படத்தினை studio வில் உள்ள கணினியில் சேகரித்து வைத்து அதற்க்கான வாடிக்கையாளர் எண். என்று சில எண்களை கொடுப்பார்கள் இதன் மூலம் அந்த எண்ணை வைத்து எப்பொழுது வேண்டுமானாலும் புகைப்படத்தை print செய்து கொள்ளலாம்.

இது பெண் வாடிக்கையாளர்களுக்கு சுலபமாக இருந்தாலும் இதன் மூலம் பல பிரச்சனை நேரிட வாய்ப்பு அதிகம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள்வது மிக முக்கியமானது.

வாடிக்கையாளர் அட்டை தொலைந்தாலோ அல்லது வாடிக்கையாளர் எண் வேறு சில கொடியவர்களிடம் கிடைத்தாலோ அதனை வைத்து தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதனை தவிர்க்க உங்களின் புகைப்படத்தை CD அல்லது pen drive (பென் டிரைவ்) மூலமாக காப்பி செய்து கொண்டு studio வில் உள்ள உங்களின் புகைப்படங்களை அழித்து விடம்படி கூறுங்கள்.

இதனால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்த்திட முடியும். 


  
– முஹம்மது சாலிஹ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-