அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 

மலைக்க வைக்கும் மலையருவி களைக் கொண்டதுதான் எங்கள் மலையாளப்பட்டி சின்னமுட்லு. பெரம்பலூர் மாவட்டத்தின் பெரு மைமிகு அடையாளங்களில் ஒன்று.

மங்கையின் தேகத்தைப்போன்ற மத மதப்புடன், அகடுகளை, முகடுகளை அடுத்தடுத்துப் பரப்பிவைத்து, அண் ணாந்து பார்க்கச்செய்கிற அதிசய பூமியிது. பச்சை சேலையைப் போர்த்தியப் பெண்ணொருத்திப் படுத்துறங்குவது போலத்தான் பார்வைக்குத் தெரிந்து பரவசப்படுத் துகிறது.

வறண்ட மாவட்டமெனக் கூறுவோர் இங்கு வந்துபோனால் வாயடைத் துப் போவார்கள். அடைமழையே பெய்யாத மாவட்டத்தில் ஐந்தாறு அருவிகளா என்றக் கேள்வியும் அடுத்தடுத்து எழும்.

அணையப்போகும் விளக்கு அடர்த்தியாய் எரிவதைப்போல், கடலுக்குச் சென்று காணாமல் போவதற்காகவே, கரடுமுரடான ஓடைகளில் கர்ஜித்தபடி, நிற்காமல் ஓடுகின்ற நீரோடைகள் இங்குதான் உள்ளது. நினைத்தாலே சிலிர்க்கி றது.

பத்திரிக்கையாளனாகச் சென்று பார்த்தபோது, பாழாய்ப்போகும் தண்ணீரைப்பார்த்து பரிதாபப்பட்டு, ஆட்சியாளர்களைக் கொண்டு, அணையைக் கட்டித் தடுத்திட வேண்டுமென்ற ஆதங்கம்தான் எழுந்தது. பாளையத்திலிருந்து ஒரு பார்வையாளனாகச் சென்று ரசித் தபோது, காலில் கொலுசு கட்டிய பெண்ணைப்போல கலகலக்கச் செல்லும் கல்லாற்று ஓடை யைய்போய், கைதுசெய்வதைப் போல், தடுத்துநிறுத்தி தவறிழைக்க வேண்டுமா. சிலிர்க்க வைக்கும் அழகையெல்லாம் சிறைப்படுத்த வேண்டுமா. ஆசையாய் ரசிக்கிற அழகு எல்லாம் அணைக்கட்டுக்குள் அடங்கிடுமா என்ற அங்கலாய்ப்பே வருகிறது.

சிறைப்படுத்தும் முன்பாக சீக்கிரம் நீங்களும் சென்றுவாருங்கள். கொடைக்கானலைக் காட்டிலும் கொள்ளையழகோடு, இங்குப் பசுமை யோடு, பாசமும் கொட்டிக்கிடக்கி றது...!! உள்ளுரில் ஒரு ஊட்டியா என்பதை உணரச்செய்கிறது...!!!


பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் (17KM), அரும்பாவூர், மலையாளப் பட்டி, சின்னமுட்லு(17KM) பயணித்தால் மலையடிவா ரத்தை அடையலாம். அங் குள்ள கல்லாற்று ஓடைக ளில் நீராடலாம். குழந்தை களுடன், நீண்டதூரம் நடக்க முடியாத பெண்களுடன் அருவிக்கு செல்வதுசிரமம்.
இளைஞர்களுக்கு இன்ப லோகமாக இருந்தாலும் மணிக்கணக்கில் மலை யேற வேண்டும் என்பதே உண்மை. உண்ணும் பொருட்களை நாமே கொண் டுசெல்ல வேண்டும். காடுகளைத்தான் பார்க்க முடியும். கடைகளைப் பார்க்க முடியாது...!


நன்றி -ஜே.வில்சன், பெரம்பலூர்  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-