அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கடந்த சில நாட்களாக சென்னையை வெளுத்து எடுத்து வரும் கனமழையால், தற்போது சென்னை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் கோடம்பாக்கம் வீடு மற்றும் ஸ்டூடியோவிலும் நீர் புகுந்துவிட்டது. இதுகுறித்து அவர் தன் டுவிட்டரில் நண்பர்களும், நலம் விரும்பிகளும் கூறிய ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி.

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மற்ற பகுதியில் உள்ளவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை பார்ப்பதற்கு கஷ்டமாக உள்ளது.

என்னுடைய குடும்பத்தினர் மற்றும் ஸ்டுடியோ டீம் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஸ்டுடியோ மற்றும் வீட்டுக்குள் புகும் வெள்ள நீரை பம்ப் மூலம் வெளியேற்றுகிறார்கள். முழுவதுமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

சென்னையை மீண்டும் சரியான வகையில் புதுப்பித்து, எதிர்கால இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாக்கப்படுவோம் என நம்புகிறேன். கடவுள் நமக்கு எல்லா வகையிலும் இதனை எளிதாக செய்து முடிக்க உறுதுணையாக இருப்பார் என்று டுவிட் செய்துள்ளனர்.

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-