அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சென்னை மாநகரத்தை வெள்ளம் சூழ்ந்ததும், அச்சமடைந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பேருந்து நிலையம், ரெயில் நிலையம் விமான நிலையம் என்று விரைந்தனர்.

இதற்காவே காத்திருந்த தனியார் பேருந்து நிறுவனங்கள் டிக்கெட் விலையை ஆயிரக்கணக்கில் உயர்த்தி கட்டணக் கொள்ளை அடித்தன. இவர்கள் தான் இப்படி என்றால் விமான நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு மக்களை சுரண்டியது ஒரு பேஸ்புக் பதிவு மூலமாக வெளியாகியுள்ளது.

அனுபம் ஆனந்த் என்ற இளைஞரின் பேஸ்புக் பதிவு இதோ…

“சென்னை நகரம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் பலர் கஷ்டப்பட்டு பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அன்று திடீரென விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டது. நான் ரூ. 22 ஆயிரம் கொடுத்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் டெல்லிக்கு டிக்கெட் வாங்கினேன். ஆனால், பொதுமக்கள் பலர் டிக்கெட் கிடைக்காமல் விமான நிலைத்தில் காத்திருந்தனர்.

நான் விமாத்திற்குள் சென்று பாத்தபோது, பல இருக்கைகள் காலியாக கிடந்தன. நான் அவற்றை செல்போனில் படம் எடுத்தேன். பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என்று பலர் டெல்லிக்கு செல்ல துடித்துக்கொண்டிருந்த போது விமாத்தின் பல இருக்கைகள் காலியாக இருந்ததை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செயல்பாடு மனிதத்தன்மை அற்றது.

இந்த விவகாரம் பிரதமர் அலுவலத்திற்கும், இந்திய விமான ஆணையத்திற்கும் சென்று சேரும் வகையில் இந்த பதிவை லைக் செய்யாமல், பகிர்ந்துகொளுங்கள். இந்த செயலில் ஈடுபட்ட ஸ்பைஸ்ஜெட் மீதும் மற்ற விமான நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை இதுவரை 28 ஆயிரம் பேர் பகிர்ந்துக்கொண்டுள்ளனர். ஆனால், இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-