அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 
 

சென்னை: மழை பாதிப்பால் உருகுலைந்த மக்களுக்கு கோடிகோடியாய் நடிகர்கள், நடிகைகள் நலத்திட்டம் வழங்கி வருவதாக சமூக வலை தளங்களில் போலியான தகவல்கள் பரவி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்கள் மழையால் தத்தளிக்கிறது. லட்சக்கணக்கான வீடுகள் மழை நீரால் சூறையாடப்பட்டுள்ளது. பீரோ, பிரிட்ஜ், பாத்திரப் பொருட்கள் உள்ளிட்ட பல வீட்டு உபயோகப்பொருட்கள் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டது. நீரில் மூழ்கியும், மின்சாரம் தாக்கியும், பள்ளத்தில் விழுந்தும் நூற்றுக் கணக்கானவர்கள் உயிரை விட்டனர். உயிர் இழந்தவர்கள் பலரின் முகமும், முகவரியும் தெரியாமல் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் கிடக்கின்றனர். பால், நீர், மருந்து, மாத்திரைகள், உணவு பொருட்கள் இல்லாமல் லட்சக்கணக்கானவர்கள் இருட்டறை கொசுக்கடியில் தூக்கத்தை தொலைக்கின்றனர்.

பஸ், கார், சைக்கிள் செல்லும் வழித்தடத்தில் தற்போது, படகு செல்லும் அவல நிலை உள்ளது. இப்படி மழையால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் அனைத்தையும் இழந்து தற்போது நிற்கதியாக நடுத்தெருவில் தவித்து வருகின்றனர். இப்படி, தவிப்பவர்களுக்கு அரசு செய்யும் உதவிகளை விட தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், தனியார் நிறுவனத்தினர், முகத்தையும், முகவரியையும் மறைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான கருணை உள்ளங்கள் உதவி வருகிறது. ஆனால், ரசிகர்களால் பாலாபிேஷகம், பன்னீர் அபிேஷகம், தேன் அபிஷேகம் செய்யப்பட்டு ரசிகர்களின் கட்டணத்தால் தங்கள் நடிப்பு சம்பளத்தை கோடி, கோடியாய் உயர்த்திய தமிழ் முன்னணி நடிகர்கள், நடிகைகள் பலர் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதைவிட கொடுமையான விசயம் என்னவென்றால் சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் நிவாரண நிதியாக கோடி கோடியாய் கொடுத்துள்ளார், விஜய், அஜித், மற்றும் முன்னணி நடிகைகள் பலர் போட்டிப் போட்டுக் கொண்டு உதவி செய்வதாகவும் பாதிக்கப்பட்ட ஊர்களை தத்தெடுத்து உதவி வருவதாகவும் வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கில் தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து விசாரித்தால் குறிப்பிட்ட யாரும் இதுவரை உதவி கரம் நீட்டவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்களுக்கு தங்கள் மேல் வெறுப்புணர்ச்சி வந்து விடக்கூடாது என்பதற்காக திரை நட்சத்திரங்கள் இதுபோன்று ரசிகர் மன்ற நிர்வாகிகளாலும், நெருக்கமானவர்கள் மூலம் போலி விளம்பரம் தேடுவது பொது மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. வெளிமாநில நடிகர் பலர் உதவி கரம் நீட்டியுள்ள நிலையில், பாலாபிஷேகத்தையும், கைத்தட்டலையும், கோடிக்கோடியாய் வருமானத்தையும் பெற்றுக் கொண்டு ரசிகர்களின் வேதனையை கைகட்டி வேடிக்கை பார்க்கும் நடிகர், நடிைககளின் மன நிலை மாற வேண்டும் என பரிதாப ரசிகன் கைகூப்பி கேட்கிறான்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-