அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார் ஆட்சியர் தரேஸ் அஹமது.

வட கிழக்கு பருவமழையால் பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மொத்தம் உள்ள 73 ஏரிகளில் 33 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

இதனால் பொதுமக்களுக்கு சேதம் ஏதும் ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லையான வெள்ளாற்றில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சுமார் 11,400 கனஅடி நீர் வீதம் வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால், ஆற்றின் வழித்தடங்களான லப்பைக்குடிகாடு, பெண்ணகோணம், ஒகளூர் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அகரம் சீகூர் - செந்துறை சாலையில் பள்ளகாலிங்கராய நல்லூர் பகுதியில் சின்னாற்றில் அமைக்கப்பட்டிருந்த தாற்காலிக தரைப்பாலம் சேதமடைந்ததை பார்வையிட்ட ஆட்சியர், மாற்று ஏற்பாடு செய்ய துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், கிராமப்புற மக்களுக்கு மழையால் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட மக்களை அருகில் உள்ள பள்ளிகள்,சமுதாய கூடங்களில் தங்கும் வசதி, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி அந்தந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, வேப்பூர் ஒன்றியக்குழுத் தலைவர் என். கிருஷ்ணகுமார், பொதுப்ணித் துறை உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிச்சாமி, சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-