அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ரியாத்,

மன்னர் ஆட்சி நடக்கிற சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் பங்கேற்ற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் முதல் முறையாக பெண்கள் ஓட்டு போட்டனர். தேர்தலில் 978 பெண்கள், வேட்பாளர்களாகவும் போட்டியிட்டனர். இது சவுதியில், மறைந்த மன்னர் அப்துல்லா மேற்கொண்ட அரசியல் சீர்திருத்தத்தின் மூலமாக ஏற்பட்டுள்ள வரலாற்று திருப்புமுனையாக கருதப்படுகிறது.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவர தொடங்கின. அதில், மெக்கா மாகாணத்தில், மெத்ரக்கா என்ற இடத்தில் சல்மா பிண்ட் ஜாப் அல் ஒட்டேய்பி என்ற பெண் வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏழு ஆண்களையும், 2 பெண்களையும் எதிர்த்து நின்று அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் எந்தவொரு ஆண் வாக்காளரையும் பெண் வேட்பாளர்கள் நேரில் சந்தித்து ஓட்டு கூட கேட்கமுடியாது என்ற சூழலில் அவர் இந்த வெற்றியை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிதக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-