அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர், : பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடைபாதைகளை கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் 50 கடைகள் உள்ளன. இந்த பஸ் ஸ்டாண்டில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையில் தொலைதூரம் செல்லும் பேருந்துகளும், கும்பகோணம், தஞ்சை, நாமக்கல், சேலம், கோவை, திருச்சி, கள்ளக்குறிச்சி, கடலூர் செல்கிற புறநகர் பேருந்துகளும், உள்ளூர் பேருந்துகளும், நகரப் பேருந்துகளும் நாள்தோறும் நூற்றுக்கணக் கில் வந்து செல்கின்றன. இதற்காக புது பஸ் ஸ்டாண்டுக்கு வருகிற பயணிகள் தங்கள் பகுதிக்குச் செல்லும் பேருந்துகளில் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளை அங்குள்ள கடைகள் ஆக்கிரமித்துக்கொள்வதால் பயணிகள் தினமும் அல்லாடி வருகின்றனர். பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமர்வதற்காக கட்டப்பட்டிருந்த நிழற்குடைகளையும் கடைகளைக் கட்டுவதற்காக நகராட்சி நிர்வாகம் அகற்றிவரும் சூழலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இரும்பு நாற்காலிகளும் உடைந்து கிடப்பதால் பயணிகள் அமரவும் முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் அதுவென்பதை மறந்து தங்களது எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டுள்ள ஆக்கிரமிப்புக் கடைகளுக்கு சம்மந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் எச்சரித்து, பயணிகளுக்கான வசதிகளை செய்துதர வேண்டுமென பயணிகள், பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-