அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


புதுடெல்லி,மோடியின் சென்னைப் பயணம்: போட்டோஷாப் வேலை செய்து மாட்டிக் கொண்ட பி.ஐ.பி.


சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழை வெள்ளத்தால் பொதுமக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். ரோடுகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ரெயில், விமான சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பெறும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.இந்த நிலையில் சென்னையில் மழை வெள்ள சேதங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதுபோல் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழக மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக நேற்று தமிழகம் வந்தார். அதேபோல் பிரதமர் ஹெலிகாப்டரில் பயணித்தவாறு வெள்ள சேதங்களை நரேந்திர மோடி பார்வையிட்டு, விவரங்களை கேட்டறிந்தார். சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் மழை வெள்ள சேதங்களை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பறந்து சென்று பார்வையிட்டார்.இந்த நிலையில், பிரதமர் மோடி ஹெலிகப்டரில் சென்று பார்வையிடும் புகைப்படங்கள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை வெளியிடும் பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ( பிஐபி) தனது டுவிட்டரில் இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தது. இந்த புகைப்படத்தில் ஹெலிகாப்டரில் இருந்து கொண்டு ஜன்னல் வழியாக வெள்ள சேதங்களை பார்ப்பது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டு இருந்தன. ஆனால், இந்த புகைப்படத்தில், சென்னையின் வெள்ளத்தில் மிதக்கும் தெருக்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் போன்றவை நம்பமுடியாத அளவுக்கு தெளிவாக தெரிவது போல காட்டப்பட்டு இருந்தந்து. இருப்பினும் பிஐபியில் வெளியிடப்பட்டு இருந்த மற்றோரு படத்தில் முற்றிலும் முரண்பட்ட வகையில் இருந்தது.இந்த இரு புகைப்படங்களின் வேறுபாட்டை கவனித்த சமூக வலைதள பயனாளர்கள், ஹெலிகாப்டரில் சென்றவாறு தரைப்பகுதியை பார்க்கும்போது இவ்வளவு நெருக்கமாக தெரியவே முடியாது. இந்த புகைப்படம் ‘போட்டோ ஷாப்’ மூலம் சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளது என விபரம் தெரிந்த சிலர் ‘டுவிட்டர்’ மற்றும் ‘பேஸ்புக்’ மூலம் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். இந்த விமர்சனங்களையடுத்து, சில மணி நேரத்தில் சர்ச்சைக்குரிய அந்த புகைப்படம் பிரதமரின் இணையதளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-