அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் அருகேயுள்ள வண்ணாரம்பூண்டியில் உள்ள அரசு மதுக் கடையை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட வண்ணாரம்பூண்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலை பெண்கள் பள்ளி, காவல் நிலையம், வேளாண்மை கூட்டுறவு வங்கி, பள்ளி வாசல், நூலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.

பேருந்து நிறுத்தம் அருகே அரசு மதுக் கடை உள்ளதால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் வியாபாரக் கடைகளும் அப்பகுதியில் உள்ளதால் சுற்று வட்டார கிராமப்பகுதி மக்கள் ஏராளமானோர் அப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

சாலையோரத்தில் மதுக் கடை உள்ளதால், மது குடிப்போர் நிலை தடுமாறி அலங்கோலமாக விழுந்து கிடக்கின்றனர். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இப்பகுதியில் போதையில் வருவோர் அடிக்கடி தகராறில் ஈடுபடுகின்றனர்.

எனவே, பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் இடையூறாக உள்ள இந்த கடையை அகற்றக் கோரி கடந்த 18.11.2012-ல் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் ஒரு மாதம் கடை பூட்டப்பட்டது. பின்னர், மீண்டும் அதே இடத்தில் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடையை அகற்றக்கோரி அந்தக் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களிடமும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, அரசு விதிகளை மீறி இடையூறாக அமைந்துள்ள இந்த மதுக் கடையை உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளன

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-