அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் அருகே கார் கவிழ்ந்து சிமெண்டு ஆலை ஊழியர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

சிமெண்டு ஆலை ஊழியர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திரவுபதிஅம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது27). இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு ஆலையில் டெக்னீசியனாக வேலைபார்த்துவந்தார். இவரது நண்பர் முருகன் (39). கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா டி.வி.புதூரைச்சேர்ந்தவர்.

நேற்று மதியம் பார்த்திபன், முருகன் இருவரும் ஒரு காரில் அரியலூரில் இருந்து திருச்சி செல்வதற்காக பெரம்பலூர் நோக்கி வந்துகொண்டிருந்தனர். காரை பார்த்திபன் ஓட்டிவந்தார்.

கார் கவிழ்ந்து பலி

மதியம் 1.30மணி அளவில் அந்தகார் பெரம்பலூரை அடுத்த கவுல்பாளையம் பகுதியில் ஒரு வளைவில் வந்தபோது எதிரே வேகமாக வந்த லாரி மீது மோதிவிடாமல் இருப்பதற்காக பார்த்திபன் காரை திருப்பினார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து வயல்காட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பார்¢த்திபன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

காரில் உட்கார்ந்திருந்த முருகன் பலத்தகாயம் அடைந்தார். உடனே அவரை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வயல் அருகே பள்ளத்தில் கவிழ்ந்துகிடந்த கார் உடனடியாக கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டது.

இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்து பார்த்திபன் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-