அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஆம்பூரில்
 இஸ்லாமியர் தாக்கப்பட்ட சம்பவம் உணர்த்துவது!
டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் அலுவலகத்தை சோதனையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மியினர் பிஜேபி அலுவலகம் முன் இந்தியாவெங்கும் ஆர்பாட்டம் நடத்தினர். அதே போல் ஆம்பூரிலும் பிஜேபி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனை பிஜேபியினர் எதிர்க்க ஆரம்பித்து அது சிறிய தள்ளு முள்ளாக மாறியது. காவல் துறையும் அங்கு உள்ளது.
இந்த நேரத்தில் அந்த வழியாக ஒரு முஸ்லிம் குடும்பம் காரில் வந்துள்ளது. அங்கு சென்ற பிஜேபியினர் சம்பந்தமேயில்லாத அந்த வாகனத்தில் இருந்த முஸ்லிமை கீழே தள்ளி தாக்குதல் நடத்தியுள்ளனர். காரின் கண்ணாடியையும் உடைத்துள்ளனர். தேவையில்லாமல் முஸ்லிம்களை வம்புக்கிழுப்பதின் பிண்ணனி என்ன?
இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வருகிறது. இந்து முஸ்லிம் வெறுப்பை விதைத்துதான் பிஜேபி தேர்தலை சந்தித்துள்ளது. சென்னை, கடலூர் மழை வெள்ள பாதிப்பானது இந்துக்களையும் முஸ்லிம்களையும் நெருங்கி வர வைத்துள்ளது. இந்த நெருக்கமானது பிஜேபியினரை அச்சமடைய வைத்துள்ளது. எனவே அவர்கள் காரணத்தை தேடி அலைகின்றனர். எந்த வகையிலாவது ஒரு கலவரத்தை உண்டு பண்ண திட்டமிடுகின்றனர்.
இந்து முண்ணனியோ அல்லது பிஜேபியோ முஸ்லிம்களிடம் வம்புக்கு வந்தால் உடன் எதிர் வினை ஆற்றாமல் சட்டத்தின் உதவியை நாடுங்கள். தனி ஆளாக செல்லாமல் 
 தமுமுக   , 
T.N.T.J . மற்றும் SDPI போன்ற அமைப்புகளின் மூலமாக அவர்களை எதிர் கொள்ளுங்கள். ஓடி விடுவார்கள்.
வட மாநிலங்களில் கலவரத்தில் ஓட்டு அள்ளியதுபோல் தமிழகத்திலும் செய்து பார்க்க அமீத்ஷா முயலுகிறார். அதற்கு நாம் பலியாகி விடக் கூடாது. ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் தமிழகம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். இந்துக்கள் வேறு: இந்துத்வா வேறு என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்து செயல்பட வேண்டும். நம்முடைய போராட்டத்தில் இந்து பிற்படுத்தப்பட்ட மக்ளையும் தலித்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆர்எஸ்எஸ் அரை டவுசர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம்...
தமிழகத்தில் ரத்த தானம் கொடுப்பதில் முண்ணனியில் இருக்கிறோம். வெள்ள பாதிப்பில் உயிரைக் கொடுத்து இந்துக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளோம். இது இந்து மக்களான எங்களின் தொப்புள் கொடி உறவுக்கு நாங்கள் செலுத்தும் அன்பு காணிக்கை. இதனை இஸ்லாமும் ஊக்குவிக்கிறது.
அதே இஸ்லாம் தான் 'உனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் உயிரைக் காக்க ஆயுதத்தை தூக்கு' என்கிறது. எனவே கோழைகளைப் போல் இஸ்லாமியர் அடங்கி ஒடுங்கி விடுவார்கள் என்று கனவிலும் நினைக்க வேண்டாம் இந்துத்வா வெறியவர்களே!
'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பதையும் நினைவில் வையுங்கள்.
Thanks  : suvanappiriyan 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-