அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 


இங்கிலாந்து நாடு விரைவில் கிறிஸ்தவ நாடு என்ற அந்தஸ்தை இழக்குமென்று ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.உலகில் இத்தாலிக்கு அடுத்தபடியாக மக்கள் சதவீதத்தில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் வசிப்பது இங்கிலாந்து நாட்டில்தான். தற்போது இந்த நாட்டில் இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் இன்னும் பல சமயங்களை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். இது குறித்து இங்கிலாந்து கிறிஸ்தவ ஆலயங்களின் தலைமை அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த 150 பக்க அறிக்கையில், பல்வேறு காரணங்களால் இங்கிலாந்தில் பிற சமய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், அவர்கள் பொருளாதாரத்திலும் கல்வியிலும் கூட சிறந்து விளங்குகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தமளிக்கும் விஷயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டில் 71.7 ஆக இருந்த கிறிஸ்தவர்கள் 2011 ஆம் ஆண்டில் 59.4 வீதமாக குறைந்துள்ளதுடன் 2015 ஆம் ஆண்டு கணிப்பில் இன்னும் குறைவடைந்துள்ளது என தெரிவிக்கபடுகிறது.

2001 - 2011


Thanks :Madawala News .
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-