


திருநெல்வேலி - ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியைச் சார்ந்தவர் ஹாஜா முஹைதீன் (25). இவர் கடந்த சில நாட்களாக ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வந்தார். டிசம்பர் 21 அன்று இரவு, சவாரிக்கு சென்ற இவர் ஏர்வாடி அருகில் காந்தி நகர் என்ற பகுதியில் சராமாரியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை ஏர்வாடி மக்களிடையில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து அனைத்து தரப்பினரும் 3 நாட்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தினர். அனைத்து இயக்கங்கள், கட்சித் தலைவர்கள் கலந்துக் கொண்ட பிரமாண்டமான கண்டனக் கூட்டமும் நடைபெற்றது.
கொலையாளிகளைக் கண்டுபிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நெல்லை மாவட்ட எஸ் பி விக்ரமன் இதற்காக உத்தரவிட்டிருந்தார். தற்போது ஹாஜா முஹைதீனைக் கொலை செய்த 7 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விபரம் வருமாறு
1. கதிர்வேல்சாமி
2. மகேஷ்
3. சுதாகர் என்ற மணி
4. ராஜபாண்டி
5.முத்துராமன்
6. மணிகண்ட ராஜா
7. ஜான்சன் தினேஷ்

இதில் பாலிடெக்னிக்கில் படித்து வரும் மணிகண்டராஜா மற்றும் ஜான்சன் தினேஷ் ஆகிய கொலையாளிகள் நான்குநேரி சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொலையாளிகள் கதிர்வேல்சாமி களக்காடு ஒன்றிய பாஜக செயலாளராகவும், முத்துராமன் அந்த ஒன்றியத்தின் பாஜக பொது செயலாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.