அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மற்றும் புதிய அலுவலகம் திறப்பு விழா பெரம்பலூர் ஜே.கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவும் சங்க கவுரவ செயலாளர் ஹமீதா கலாம் தலைமை வகித்தார். மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவும் புதிய அலுவலகத்தை இந்திய விமன் லீக் அகில இந்திய தலைவரும், மாநில முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கவுரவ செயலாளர் தஸ்ரிப் ஜஹான் துவக்கி வைத்தார். அனைவரையும் கவுரவ இணைச் செயலாளர் ஜியாவுத்தீன் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரம்பலூர் நூர் பள்ளிவாசல் முன்னாள் தலைவர் முகமது இஸ்மாயில் பேசியதாவது:

பெண்கள் வீட்டிலே இருந்த பொழுது அவரது திறமைகள் தெரிய வரவில்லை, அவர்கள் பள்ளிக்கு பாடங்கள் பயின்று அவரிடம் பேசும் போது தான் அவரது திறமைகள் தெரியவருகிறது. எவ்வளவு பெரிய அறிவாளிகளாகவும், ஆசிரியர்களாகவும், பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும், எண்ணற்ற திறமையுடன் உள்ளனர். ஒரு வீட்டில் ஆண் படிப்பதை விட பெண் படிப்பது பெருமைக்குரியது. அனைத்து பெண்களையும் கல்வி கற்க செய்து அவர்களின் கண் திறக்க வேண்டும். கல்லாததால் அவர்களது வாழ்க்கை பழாகாமல் தடுக்க வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில முஸ்லீம் பெண்கள் உதவும் சங்க தலைவர் முகமத் கமாலுத்தீன், பெரம்பலூர் துறைமங்கலம் பள்ளிவாசல் தலைவர் சுல்தான் இப்ராகிம், லப்பைக்குடிக்காடு பள்ளிவாசல் தலைவர்கள் முகமது இஸ்மாயில், சூல்தான் மைதீன், அப்துல் காதி, பெரம்பலூர் 4 வார்டு கவுன்சிலர் அப்துல் பாரி பெரம்பலூர் டவுன் பள்ளிவாசல் பெருளாளர் அல்லாபிச்சை, வி.களத்தூர் பள்ளிவாசல் தலைவர் லியாகத் அலி, பெரம்பலூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் முகமது ரபிக், பெரம்பலூர் மாவட்ட எஸ்.டி.டி.யு தலைவர் சித்திக் பாஷா, டாக்டர் ஜபருல்லா, பெரம்பலூர் ஜே.கே மகால் உரிமையாளர் அபுல்கலாம், நூர் பள்ளிவாசல் முன்னாள் தலைவர் முகமது இஸ்மாயில் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் கவுரவ இணை செயலாளர் ரசீத் அஹமத் நன்றி கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-