அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை எதிரே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, அதன் மாவட்டச் செயலர் அ. குதரத்துல்லா தலைமை வகித்தார். கட்சியின் மண்டல தேர்தல் அதிகாரி கே.ஏ. மீரா மொய்தீன், மாவட்டத் துணைச் செயலர்கள் ரஷீத் அஹமது, நூர் முஹம்மது, ஜமீர் பாஷா, ஏ. ஹயாத் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கட்சி பேச்சாளர் நாசர் அலிகான் சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில், பாபர் மசூதி மேல்முறையீட்டு வழக்கை விரைவாக முடிக்க வேண்டும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதில், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலர் வழக்குரைஞர் பி. காமராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் ஜெ. தங்கதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் என். செல்லதுரை, திராவிடர் விடுதலைக்கழக மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் எம். சுல்தான் மொய்தீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்டப் பொருளாளர் முஹம்மது இலியாஸ் வரவேற்றார். முன்னாள் நகரச் செயலர் முஹம்மது அனீபா நன்றி கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-