அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

அமீரக காயிதேமில்லத் பேரவை சார்பில் உத்தம நபியின் உதய தின விழா அபுதாபியில் நடைபெற்றது

அமீரக காயிதே மில்லத் பேரவை அபுதாபி மண்டலம் சார்பில் உத்தம நபியின் உதய தின விழா மிகசிறப்புடன் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேரவையின் அபுதாபி மண்டலச் செயலாளரும்,அய்மான் சங்கத் தலைவருமான அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார். துவக்கமாக மாணவர் விருதாச்சலம் ஸலாஹுத்தீன் அய்யூப் இறைமறை வசனங்கள் ஓதினார்.
பேரவையின் அமீரக துணைத் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜி முன்னிலை வகித்தார்.

பேரவையின் செயற்குழு உறுப்பினர் லால்பேட்டை சல்மான் பாரிஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

காயல் மெளலவி ஹீஸைன் மக்கி ஆலிம்,இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சென்னை அடையாறு ஜும்ஆ மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலவி ஷதீதுத்தீன் பாகவி சிறப்புரை நிகழ்த்தினார்.

தாய்ச்சபை பாடகர் தேரிழந்தூர் தாஜுத்தீன் இஸ்லாமிய கீதங்கள் பாடினார்.

நிகழ்ச்சியை பேரவையின் அமீரக அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி தொகுத்து வழங்கினார்.

அபுதாபி மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி நன்றி கூற லால்பேட்டை மெளலவி ரஷீத் அஹ்மத் துஆ ஓதினார்.

நிகழ்ச்சியில் அய்மான் சங்கம், இந்திய முஸ்லிம் பேரவை, அபுதாபி லால்பேட்டை ஜமாஅத், மெளலிது கமிட்டி நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரவையின் நிர்வாகிகள் ஆடுதுறை அப்துல் காதர்,கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ்,லால்பேட்டை முஹம்மது அப்பாஸ், அப்துல் ஹக்கீம், முஸ்தாக், ஆடுதுறை ஷபீர் அஹமது, லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-