அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் கவுரவ செயலாளர் ஏ.ஹமீதா கலாம் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஜே.கே மகாலில் பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் (perambalur District All women Aid Society) புதிய அலுவலகம் திறப்பு விழா இன்று (சனி) காலை 10.30 மணி அளவில் மாவட்ட பிற்படுத்தப்ட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜீனத் பானு தலைமையில் நடக்கிறது. இதனை இந்திய விமன் லீக் அகில இந்திய தலைவரும், மாநில முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கவுரவ செயலாளர், உபதலைவர் தஸ்ரிப் ஜஹான் துவக்கி வைக்க உள்ளார்கள். கவுரவ இணைச் செயலாளர் ஜியாவுத்தீன் வரவேற்கிறார். அச்சங்கத்தின் பொறுப்பாளர்கள், பிற மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் தமிழக அளவில் இருந்து கலந்து கொள்கின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய முஸ்லீம் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். அச்சங்கத்தின் கவுரவ இணை செயலாளர் ரசீத் அஹமத் நன்றி தெரிவிக்கிறார் என தெரிவித்துள்ளார். எனவே முஸ்லீம் சமுதாயத்தை சார்ந்த பெண்கள், அதிகளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-