அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஒரு வெளிநாட்டுப்பிரஜையிடம் கத்தார் அரசு அங்கீகரிக்கும் ஒரு நாட்டின் டிரைவர் அனுமதிப்பத்திரம் இருக்குமென்றால் அதைக் கொடுத்து கத்தார் லைசன்சுக்கு அதைமாற்றிக் கொள்ளமுடியும்.
ஆனால் இந்த வாய்ப்பை கத்தார் அரசு ரத்து செய்துள்ளது. அந்த சட்டத்தையே மாற்றிய பெருமை ஒரு இலங்கை தமிழரை சாரும்.
கத்தார் மாதிரி முழுமையாக இலத்திரனியல் அடிப்படையில் அரச சக்கரம் சுழலும் ஒரு நாட்டில் சவுதி அரேபியாவில் தயாரித்த டிரைவர் அப்பாஅனுமதிப் பத்திரங்களைக் கொண்டுவந்து அதை கத்தார் லைசன்சுக்கு மாற்றி பணம் சம்பாதிக்கும்ஒரு உத்தியைப் பல மாதங்களாக நம்மவர் ஒருவர்

கையான்டு வந்திருக்கிறார்.
ஒரு லைசனை செய்து கொடுக்க பல இலட்சங்கள் பெற்றும் இருக்கிறார்.
ஒரு வெளிநாட்டு லைசனை மாற்றுவதற்கு (200 - 250 ) ரியால் கத்தார் அரசுக்கு செலுத்த வேண்டும்.

அதை செலுத்துவதற்கும் இந்த ஆசாமி ஒரு கத்தாரியின் க்ரெடிக் காடை பயன்படுத்தி இருக்கிறார்.அங்கேதான் மாப்புள மாட்டி இருக்கிறார்.
ஒரு அரச அலுவலகத்து அடிக்கடி தனது க்ரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தப்பட்டுள்ளதை அவதானித்த அந்த கத்தார் பிரஜை அடுத்தமுறை வந்தால் ஆளைப்பிடிக்குமாறு பொலிசாரிடம் சொல்லியிருக்கிறார்.ஆசாமி வசமாக மாட்டிக் கொண்டு இப்போது உள்ளே இருக்கிறார்
இந்த புன்னியவான் செய்த வேளையினால் மத்தியகிழக்கு நாடுகளின் பிரஜைகளைத் தவிர்ந்த யாருக்கும் இனி லைசன்சை கத்தார் லைசன்சுக்கு மாற்றீடு செய்ய முடியாது.
இந்த சட்டம் நிறைய வெளிநாட்டவர்களை வெகுவாக பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

-சப்வான் பஷீர்-

மடவளை நியூஸ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-